Posts

என் நடைபயணம்

 அதிகாலை 6 மணி, இயந்திர உதவியுடன் துயில் எழுந்து  Metuchen பசுமைசாலை வந்தடைந்தேன். புன்னகையுடன் காலை வணக்கத்தை தெரிவித்த மகியை கண்டதும் மன மகிழ்வுடன் நடை பயணத்தை ஆரம்பித்தோம். நேற்றைய மட்டைபந்து வேடிக்கைகளை நினைவூகூர்ந்தவாறே எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். அமெரிக்கா அரசியல் முதல் சென்னை பெருமை வரை எங்கள் சுவாரசிய பேச்சு தொடர்ந்தது. பல முறை வரு வோர்களுக்கு வணக்கம் தெரிவித்த மகியின் பேச்சு சிறு இடைவேளையில்  மௌனமாய் போனதும், திடீரென ராஜின் குரல் என் பெயர் சொல்லி அழைத்தது.  ராஜ் சிறு புன்னகையுடன் கோபமாக, " நானும் சபாவும் உங்களுக்காக watchung trail வாயிலில் காத்துக்கொண்டு இருந்தோம். நீங்கள் எங்களுக்கு முன்பாக வந்து இருந்தால் ஒரு தகவல் whatsapp அனுப்பி இருக்கலாமே?" என விவாதமாக பேச்சை ஆரம்பித்தார். நான் தட்டுத்தடுமாறி , "இல்லை ராஜ், மகியுடன் பேசிக்கொண்டே வந்தேன். அதுதான்.." என சொல்லும்போதே, ராஜ், "வாங்க போகலாம்" என நடக்க ஆரம்பித்தார். ஒன்றும் புரியாமல் ஏதோ நினைத்து சுற்றும் முற்றும் மகியை தேடிக்கொண்டவாறே நடையை ராஜூவுடனும், சபாவுடனும் தொடர்ந்தேன். இருவரும் அதே அமெரிக்