என் நடைபயணம்
அதிகாலை 6 மணி, இயந்திர உதவியுடன் துயில் எழுந்து Metuchen பசுமைசாலை வந்தடைந்தேன். புன்னகையுடன் காலை வணக்கத்தை தெரிவித்த மகியை கண்டதும் மன மகிழ்வுடன் நடை பயணத்தை ஆரம்பித்தோம். நேற்றைய மட்டைபந்து வேடிக்கைகளை நினைவூகூர்ந்தவாறே எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். அமெரிக்கா அரசியல் முதல் சென்னை பெருமை வரை எங்கள் சுவாரசிய பேச்சு தொடர்ந்தது. பல முறை வரு வோர்களுக்கு வணக்கம் தெரிவித்த மகியின் பேச்சு சிறு இடைவேளையில் மௌனமாய் போனதும், திடீரென ராஜின் குரல் என் பெயர் சொல்லி அழைத்தது.
ராஜ் சிறு புன்னகையுடன் கோபமாக, " நானும் சபாவும் உங்களுக்காக watchung trail வாயிலில் காத்துக்கொண்டு இருந்தோம். நீங்கள் எங்களுக்கு முன்பாக வந்து இருந்தால் ஒரு தகவல் whatsapp அனுப்பி இருக்கலாமே?" என விவாதமாக பேச்சை ஆரம்பித்தார். நான் தட்டுத்தடுமாறி , "இல்லை ராஜ், மகியுடன் பேசிக்கொண்டே வந்தேன். அதுதான்.." என சொல்லும்போதே, ராஜ், "வாங்க போகலாம்" என நடக்க ஆரம்பித்தார். ஒன்றும் புரியாமல் ஏதோ நினைத்து சுற்றும் முற்றும் மகியை தேடிக்கொண்டவாறே நடையை ராஜூவுடனும், சபாவுடனும் தொடர்ந்தேன்.
இருவரும் அதே அமெரிக்கா அரசியல் முதல் தமிழ் பள்ளிவரை சுவாரசியமாக பேச்சை ஆரம்பித்தார்கள். எனக்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது. கண்கள் இருண்டன. சிறுது நேரத்தில் நினைவு திரும்பினால். மகி புன்னகையுடன், "மன்னிக்கவும், தல. கறிக்கடை கண்டவுடன் உங்களிடம் சொல்லாமல் கறி வாங்க சென்றுவிட்டேன்", என இரண்டு கையிலும் பையுடன் நின்று கொண்டுஇருந்தார். மயக்க வேளையிலும் நமக்கு நாக்கு பிளராமல் மகியை நோக்கி, "கண் அசந்தால் என்னையும் கறியாக்கி விடுவீர்கள் அய்யா" என சிரித்து கொண்டே கூறினேன். கன பொழுது யோசிக்காமல் மகி, "நான் ஆடு, கோழி, மீன் என மிருகங்கள் தவிர்த்து வேறேதும் உண்பதில்லை" என நகைக்கும் போது, சிறு தொலைவில் ஒரு அவசரொலி ஒலிப்பது கேட்டது.
ஒலிவந்த திசையில் அணிச்சையாய் என் கரம் அலைபேசியை தேடி பார்த்தபோது, நினைவுதிரும்பிய நேரம் காலை 6 மணி. இந்த கனவுக்கு காரணமான இந்த கயவர்களை என்ன செய்யலாம் என்ற கேள்வியை வாசகர்கள் உங்கள் பக்கம் விட்டு விடுகிறேன்.
நன்றியும் பிழைகளுக்கு மன்னிப்பும்.
இவண் ,
ரஞ்சித்
அருமை.. இதை 20 ஆண்டுகள் கழித்து நாம் படிக்கும் போது நிச்சயம் நம் நடைப்பயிற்சி நினைவுகள் இதயத்தை வருடிவிட்டு செல்லும் என்பது திண்ணம்...
ReplyDelete